உலகம்

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில் பதவியேற்ற எம்.பி.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு விழாவில் புதிய எம்.பி ஒருவர் சமஸ்கிருதத்தில் பதவியேற்றார்.

வெல்லிங்டன்:-

நியூசிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா, நியூசிலாந்தின் பூர்வீக மொழியான மாவோரி மற்றும் இந்தியாவில் செம்மொழிகளுள் ஒன்றான சமஸ்கிருதத்திலும் பதவிப்பிரமாணம் செய்தார்.

நியூசிலாந்தில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதன் மூலம் ஜெசிந்தா 2-வது முறையாக பிரதமர் ஆனார். இந்த தேர்தலில் ஹாமில்டன் மேற்கு தொகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா (வயது 33) தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். அப்போது கவுரவ் சர்மா இந்திய மொழியான சமஸ்கிருதத்தில் பதவியேற்றார்.


இதுகுறித்து நியூசிலாந்துக்கான இந்திய தூதர் முக்தேஷ் பர்தேஷி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நியூசிலாந்து பூர்வகுடிகளின் மொழியான மாவோரியில் கவுரவ் சர்மா முதலில் பதவியேற்றார். அதைத்தொடர்ந்து இந்திய செம்மொழியான சமஸ்கிருதத்தில் பதவியேற்றுள்ளார். இதன் மூலம் நியூசிலாந்து, இந்தியா ஆகிய இரு நாடுகளின் கலாசாரத்துக்கும் அவர் மதிப்பளித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

கவுரவ் சர்மா இந்தியாவின் இமாசலபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் பிறந்தவர் ஆவார். இவர் நியூசிலாந்தின் ஆக்லந்தில் எம்.பி.பி.எஸ். பயின்று பின்னர் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தார். 

இவர் ஹாமில்டன் நகரில் டாக்டராக பணியாற்றி வந்த நிலையில் ஆளும் தொழிற்கட்சி வேட்பாளராக அதே தொகுதியில் போட்டியிட்டு தேசிய கட்சியின் டிம் மசிண்டோவை 4,386 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.பி. ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee