சினிமா

என் வாழ்க்கையை ஓடவைத்த தியேட்டரை இடிக்க போகிறார்கள்- இயக்குனர் மிஷ்கின் வருத்தம்

தன் வாழ்க்கையை ஓடவைத்த திரையரங்கை இடிக்கப் போகிறார்கள் என்ற வலி மிகுந்த பதிவு ஒன்றை தனது சமூகவலைத்தள பக்கத்தில் எழுதியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.

சென்னை:-

இயக்குநர் மிஷ்கின் சிறுவயதில் தான் சிறுவயதில் திரைப்படம் பார்த்த என்.வி.ஜி.பி தியேட்டருக்குச் சென்று அத்திரையரங்கின் தற்போதைய நிலை குறித்து வலியோடு உருக்கமாக எழுதியுள்ளார்.

“நான் ஐந்தாவது வயதில் எனது தந்தையுடன் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்கு சென்று புரூஸ்லி நடித்த எண்டர் தி டிராகன் படத்தை பார்த்தேன். 

சிறுவனாக அந்த தியேட்டரில் பல படங்களை பார்த்து ரசித்து இருக்கிறேன். இப்போது அடுத்த படத்தின் லொகேஷனுக்காக திண்டுக்கல் சென்றபோது அந்த தியேட்டரை பார்க்க சென்றேன். தியேட்டர் உரிமையாளர் இங்கு படம் ஏதும் ஓடவில்லை என்றார். என் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டர் என்றேன். தியேட்டரில் ஐந்து வயது சிறுவனாக நுழைந்து ஒரு நாற்காலியில் உட்கார்ந்து திரையை அண்ணாந்து பார்த்தேன். 

சிறுவயதில் பார்த்த தூண்கள் அப்படியே இருந்தன. ஏன் தியேட்டரில் படம் ஓடல என்று கேட்டேன். காலம் மாறிவிட்டது. டி.வி. பைரசி, நெட் வந்ததால் படம் ஓட்டுறத நிப்பாட்டிட்டோம். அடுத்த வாரம் இந்த தியேட்டரை இடிக்கப்போகிறோம் என்றார். நெஞ்சில் வலியுடன் காரில் ஏறி வந்து விட்டேன். 

அந்த தியேட்டரின் வாசலில் அண்ணாந்து பார்த்தவாறு ஒரு ஐந்து வயது சிறுவன் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறான் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee