இந்தியா

அரசு பள்ளிக்கு மறைந்த பாடகர் எஸ்.பி.பி. பெயர் வைக்கும் ஆந்திர அரசு

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கௌரவம் சேர்க்கும் வகையில் ஆந்திர அரசு நெல்லூர் இசை பள்ளிக்கு பெயர் வைக்க முடிவுசெய்துள்ளது.

நெல்லூர்:-

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாத்திதற்கும் மேல் மருத்துவமனையில் இருந்த அவர்  கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி மதியம் மரணம் அடைந்தார். தமிழக அரசு சார்பில் முழு மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம்  பிறந்து வளர்ந்த ஆந்திர மாநில நெல்லூரில் உள்ள அரசு இசை மற்றும் நடனப் பள்ளியின் பெயரை டாக்டர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அரசு இசை மற்றும் நடனப் பள்ளி என்று பெயர் மாற்ற ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதனை அம்மாநில அமைச்சர் கவுதம் ரெட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த அறிவிப்பிற்கு எஸ்.பி.பி.யின் மகன் சரண் ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  அரசின் இந்த அறிவிப்பால் பார்த்து  எஸ்.பி.பி.யின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எஸ்.பி.பி. அவர்கள் தற்போது உயிரோடு இல்லாவிட்டாலும் அவரது பாடல்கள் மூலம் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். 


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee