இந்தியா

புல்லட் ரெயில் திட்டம்: ரூ. 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பெரிய ஒப்பந்தம் பெற்ற நிறுவனம்

அகமதாபாத்- மும்பை இடையிலான புல்லட் ரெயில் திட்டத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளைச் செயல்படுத்தும் ஒப்பந்தம் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி

அகமதாபாத்-மும்பை புல்லட் ரெயில் திட்டத்திற்காக உள்கட்டமைப்பு  நிறுவனமான லார்சன் அண்டு  டூப்ரோ (எல் அண்டு டி) உடன் நாட்டின் மிகப் பெரிய அரசு நிதியுதவி பெற்ற ரூ.24,000 கோடி சிவில் ஒப்பந்தத்தில்  தேசிய அதிவேக ரெயில் கார்ப்பரேஷன் (என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்) வியாழக்கிழமை கையெழுத்திடு உள்ளது.

ஜப்பான் நிதியுதவியுடன் அகமதாபாத் - மும்பை  இடையே 508 கிலோமீட்டர் தொலைவுக்கு புல்லட் ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குஜராத் மாநிலத்தில் 325 கிலோமீட்டர் தொலைவுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இது இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிகத் தொகைக்கான கட்டுமானப் பணி ஒப்பந்தமாகும். இதனால் கட்டுமானப் பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் அப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் பெறும் எனக் கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய இந்தியாவுக்கான ஜப்பானிய தூதர் சடோஷி சுசுகி, பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டிய நேரத்தில் இதுபோன்ற மகத்தான உள்கட்டமைப்பு திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஜப்பானிய தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு மாற்றுவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், நகர்ப்புற வளர்ச்சியை மாற்றும் என்றும் அவர் கூறினார்.

ரெயில்வே வாரிய தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான வி கே யாதவ் கூறுகையில், இந்த முதல் புல்லட் ரெயில் திட்டம் முடிந்ததும், மேலும் ஏழு வழித்தடங்களில் இதுபோன்ற மேலும் ரெயில் தாழ்வாரங்களை அரசு மேற்கொள்ளும்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee