தமிழ்நாடு

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் - அ.தி.மு.க.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு தேங்கி இருந்த மழை வெள்ளத்தை ராட்சத மின் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தவும், அங்கு சாய்ந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

புயல் பாதிப்பு குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே நிவர் புயல் புதுச்சேரியில் தாக்கக் கூடும் என எச்சரிக்கை செய்திருந்தது. இது சம்பந்தமாக ஆளும் காங்கிரஸ் அரசு ஆக்கப்பூர்வமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காமல் வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டது. புயலின் தாக்கத்தைவிட, அரசின் அலட்சியப் போக்கினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகப்பெரிய பாதிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

புதுவை நகர பகுதியில் மொத்த கழிவுநீர் வாய்க்கால்களும் எனது உப்பளம் தொகுதியில் உள்ள திப்புராயப்பேட்டை பகுதியில் தான் கடலில் சேரும். அந்தப்பகுதியை முழுமையாக தூர்வாராததால் பலத்த மழையில் ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த அரசு மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதலியார்பேட்டை தொகுதி புவன்கரே வீதியில் (சித்தர் கோவில் அருகில்) பாரதிதாசன் நகர், பிராமினாள் வீதி, பாரதிமில் வீதி, சாமிபிள்ளைவீதி, வேல்ராம்பட்டு கார்கில் நகர், துலுக்கானத்தம்மன் நகர், அய்யப்பசாமி நகர் உள்பட பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் அங்கு சென்று பார்வையிட்டு, சொந்த செலவில் எந்திரம் மூலம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

புயல் மழையால் நெல்லித்தோப்பு பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. அ.தி.மு.க. மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்திசேகர் அந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கினார்.

முத்தியால்பேட்டை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட சோலைநகர் வடக்கு, தெற்கு, திருவள்ளுவர்நகர், எம்.எஸ்..அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளை கொட்டும் மழையில் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அந்த பகுதியை சேர்ந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக நிவாரண மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு அரசின் வருவாய்த்துறை மூலம் உணவு வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. தானே களத்தில் இறங்கி உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee