இந்தியா

ரெயில் நிலையத்தில் பரிசோதனை மும்பை வந்த 10 பயணிகளுக்கு கொரோனா

4 மாநிலங்களில் இருந்து ரெயில்களில் மும்பை வந்தவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

மும்பை,

டெல்லி, குஜராத், ராஜஸ்தான், கோவா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால் அந்த மாநிலங்களில் இருந்து மராட்டியத்திற்கு வரும் விமான, ரெயில் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழை தாக்கல் செய்வது கட்டாயம் என்று மராட்டிய அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து மும்பை ரெயில் நிலையங்களில் கொரோனா பரிசோதனை சான்றிதழை சரிபார்க்க வார்டு அதிகாரிகளை மாநகராட்சி நியமித்து உள்ளது. கொரோனா பரிசோதனை செய்யாமல் வரும் பயணிகளுக்கு தொற்று அறிகுறி உள்ளதா என்று கண்டறிந்து, அறிகுறி இருந்தால் உடனடியாக ஆன்டிஜென் முறையில் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் நேற்று முன்தினம் சுமார் 10 ஆயிரம் பயணிகளுக்கு இவ்வாறு கொரோனா அறிகுறி சோதனை, பரிசோதனை செய்யப்பட்டது.

இவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் அதிகபட்சமாக 5 பேர் பாந்திரா டெர்மினலிலும், 3 பேர் லோக்மானிய திலக் டெர்மினலிலும், தாதர், போரிவிலி ஆகிய ரெயில் நிலையங்களில் தலா ஒருவர் வீதம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee