தமிழ்நாடு

"நிவர் புயலை விடவும் தமிழக அரசு வேகமாக செயல்பட்டது" - தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், புயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு நிவர் புயலை விடவும் வேகமாக செயல்பட்டதாக, தெரிவித்தார்.

சென்னை:-

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "நிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது. நிவர்' புயலால் மின்துறையில் ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை ரூபாய் 15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. 'நிவர்' புயலால் 2,488 மின்கம்பங்கள் சேதம். மின்னல் தாக்கி 108 மின்மாற்றிகள் பாதிப்படைந்துள்ளது. 


கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் முழுமையாக மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது. இனிவரும் காலங்களில் புயல், மழையால் பாதிக்காத வகையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கப்படும்.சென்னையில் 95% மின் விநியோகம் கொடுக்கப்பட்டுள்ளது, இன்று இரவுக்குள் முழுமையாக மின் விநியோகம் செய்யப்படும்" என்றார். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee