இந்தியா

புயல் காரணமாக எதிர்பார்த்த மழை புதுவையில் பெய்துள்ளது- வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்

நிவர் புயல் காரணமாக புதுவை, தமிழகம் பகுதியில் எதிர்பார்த்த மழை பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:

சென்னை வானிலை ஆய்வு மையம் நிவர் புயல் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறியும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது.

இதன் ஒரு பகுதியாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் புவியரசன் கள ஆய்வு செய்வதற்காக தமிழக மற்றும் புதுவை கடற்கரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக நிவர் புயல் கரையை கடந்த பகுதியான மரக்காணம், கூனிமேடு, பொம்மையார் பாளையம், புதுவை கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்த அவர் அங்குள்ள மீனவர்களை நேரில் சந்தித்து மழை பொழிவு, காற்றின் வேகம் குறித்து கேட்டறிந்தார்.

கடந்த 4 நாட்களாக வானிலை ஆய்வு மையம் புயல் கரையை கடக்கும் என்பதை அறிவித்திருந்தோம். நாங்கள் கொடுத்த தகவல் சரியாக இருக்கின்றதா? என கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்தோம். மழையானது நாங்கள் கணித்த அளவில் இருந்தது. காற்று சற்று குறைந்தது.

புயல் காரணமாக புதுவை, தமிழகம் பகுதியில் நாம் எதிர்பார்த்த மழை பொழிந்துள்ளது. அறிவித்தபடி மழையானது பெய்தது. அடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த வாரம் உருவாக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு புவியரசன் கூறினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee