விளையாட்டு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி..!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுடனான முதலாம் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது .

இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்று முதலில்  பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி  இந்திய அணி வெற்றி பெற 375 ரன்கள் இலக்காக நிர்ணயித்து உள்ளது.

கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சதம் அடித்தனர். பிஞ்ச் 124 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஸ்மித்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி அவுட் செய்தார். ஸ்மித் 66 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். ஸ்மித் தனது 10 வது ஒருநாள் சதத்தை 62 பந்துகளில் அடைந்தார். 

பிஞ்ச் மற்றும் ஸ்மித்  தவிர, க்ளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர் 76 பந்துகளில் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி அதிக விக்கெட் எடுத்தார். 10 ஓவர்களில் 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்குடன் இந்திய வீரர்கள் ஆட்டத்தை தொடங்கினார்கள். ஷிகர் தவான் மற்றும் மயங்க் அகர்வால் முதல் ஐந்து ஓவர்களில் 53 ரன்கள் எடுத்தனர். மயங்க் அகர்வால் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். தவான் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.

ஆறாவது ஓவரின் இரண்டாவது பந்தில் இந்தியாவுக்கு முதல் அடி கிடைத்தது. மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த பின்னர் அவுட்டாகி திரும்பினார். ஜோஷ் ஹேஸ்லூட்டின் பந்தில் கேட்ச்  கொடுத்து அவுட் ஆனார். அவருக்கு அடுத்து விராட் கோலி விலையாட வந்தார். 

10 வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஜோஷ் ஹேஸ்லூட் விராட் கோலியை அவுட் ஆக்கினார்.கோலி 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்து  ஸ்ரேயாஸ் ஐயர் வந்தார். அவர் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.தொடர்ந்து கே.எல்.ராகுல் வந்தார்.ராகுல் 15 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹார்திக் பாண்டியா  வந்தார். 90 ரன்களில் ஆட்டமிழந்தார். பாண்டியா. ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சாதனையை படைத்தார் ஹர்திக் பாண்டியா.  

இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து இருந்தது. இத்னால் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee