Just In

அற்புதமா இருக்கு 'அந்தகாரம்' ...படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்...!!

அந்தகாரம் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படங்களை இயக்குனர் அட்லீ தனது ட்விட்டர்ல பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் அட்லீ தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கத்தில் கடந்த 24-ஆம் தேதி அன்று பிரபல ஓடிடி தளமான 'நெட்பிளிக்ஸ்' ல்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது "அந்தகாரம்".

படத்தில் ஹீரோவாக மிரட்டியிருக்கிறார் அர்ஜுன் தாஸ். கைதி படத்தில் மாஸ் காட்டியவர் இந்த படத்தில் முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

அமானுஷ்ய சஸ்பென்ஸ் த்ரில்லராக வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த படத்தை பார்த்துவிட்டு  சினிமா பிரபலங்கள் பலரும் படக்குழுவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அந்தகாரம் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படங்களை இயக்குனர் அட்லீ தனது ட்விட்டர்ல பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பாளராக அவதரித்துள்ள அட்லீயின் கேரியரில் அந்தகாரம் மிக முக்கிய படமாக மாறியிருக்கிறது

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee