ஆன்மிகம்

இனி வீடு தேடி வரும் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலைக்கு பெருமளவில் பக்தர்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் சபரிமலை ஐயப்பன் பிரசாதத்தை நேரடியாக வீட்டிலேயே பெற்று கொள்ள தபால்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திருவனந்தபுரம்:-

இந்திய தபால் துறை, திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்துடன் இணைந்து சபரிமலை கோவில் பிரசாதத்தை நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்கு முன்பதிவு செய்வதற்கும் மற்றும் விரைவுத் தபால் மூலம் அவர்களின் வீட்டு வாசலில் வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்:-

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் அஞ்சல் வழியில் பெறுவதற்கு இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்தக் கோயிலின் மண்டல மகரவிளக்கு பூஜையை ஒட்டி திருவிதாங்கூா் தேவஸ்தானம், அஞ்சல் துறையுடன் இணைந்து பிரசாதத்தை அஞ்சல் மூலம் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தருமபுரி கோட்டத்தில் உள்ள தருமபுரி தலைமை அஞ்சலகம் மற்றும் 30 துணை அஞ்சலகங்களில் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது. அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி மற்றும் அா்ச்சனை பிரசாதம் அடங்கிய தொகுப்பு பாா்சலின் விலை ரூ. 450 ஆகும். ஒரு நபா், ஒரு விண்ணப்பத்தில் அதிகபட்சம் 10 பிரசாத பாக்கெட்டுகளைப் பெற முன்பதிவு செய்யலாம். இப்பிரசாதம் விரைவு அஞ்சல் மூலம் முன்பதிவு செய்த பக்தா்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். 

தவிர சன்னிதானம் தபால் நிலையத்தில் வழக்கமான ஸ்பீட் போஸ்ட், பார்சல், இஎம்ஓ வசதிகளோடு ஐயப்பன் படம் பொறித்த கவர் பக்தர்கள் தங்கள் படம் பொறித்த "மை ஸ்டாம்ப்" ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
27-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee