உலகம்

உய்குர் விவகாரத்தில் வாய் மூடி உள்ள இம்ரான் கான் மத சுதந்திரம் குறித்து பிரான்சுக்கு சொற்பொழிவு ஆற்றுகிறார்- பாக் எழுத்தாளர் விமர்சனம்.

உய்குர் விவகாரம் குறித்து வாய் மூடி மௌனியாக இருக்கும் இம்ரான் கான்-அரசு, மத சுதந்திரம் குறித்து பிரான்சுக்கு சொற்பொழிவு ஆற்றுகிறார் என்று பாக் எழுத்தாளர் விமர்சனம்.

இஸ்லாமாபாத்:-

சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் துன்புறுத்தப்படுவது குறித்து மௌனமாக இருக்கும், இம்ரான் கான் அரசு மத சுதந்திரம் குறித்து பிரான்சில் சொற்பொழிவு செய்யும் செயல் பாகிஸ்தானின் பாசாங்குத்தனத்துக்கு எடுத்துக்காட்டு என பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் குன்வர் குல்தூன் ஷாஹித் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 

பாகிஸ்தானில் வெவ்வேறு மதங்களின் வெளிப்படையான மத சகிப்புத்தன்மையை சிறுபான்மை இடங்களின் எண்ணிக்கையாக பிரதிபலிக்க முடியாது. சமீபத்திய ஆண்டுகளில் நாட்டில் வழிபாடு வெகுவாகக் குறைந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் மசூதிகளின் எண்ணிக்கை 1971 ல் 33 ஆக இருந்து இப்போது 2,500 க்கும் அதிகமாகிவிட்டது. இந்த வெளிப்படையான சகிப்புத்தன்மையை பாகிஸ்தானால் மற்ற மதங்களுக்கு பிரதிபலிக்க முடியாது என்பது ஒரு பரிதாபம்; பாக்கிஸ்தானில் சிறுபான்மை வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்துள்ளது. 

அஹமதிகளுக்கு எதிரான கடும் ஒடுக்குமுறை கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1,000 கட்டாயமாக இஸ்லாமிய மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சூழலில், மத சுதந்திரம் குறித்து பிரான்சுக்கு சொற்பொழிவு செய்வதற்கான தார்மீக உரிமை தனக்கு இருப்பதாக பாகிஸ்தான் எவ்வாறு கருதுகிறது. தங்கள் நாட்டில் சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்க தவறிய இம்ரான் கான் அரசு பிரான்ஸ் அதிபருக்கு சகிப்புத்தன்மை குறித்து படம் எடுக்கிறது என்பது சிறந்த நகைமுரண்.

அதேபோல, சீனாவின் சிறுபான்மை உய்குர் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் வாய் திறக்காமல் மௌனமாக உள்ளது. பாகிஸ்தான் மட்டுமல்லாமல் பிற இஸ்லாமிய நாடுகளும் வாய் திறக்காமலே உள்ளன என்று குன்வர் குல்தூன் ஷாஹித் விமர்சித்துள்ளார்.
Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee