சினிமா

பொங்கல் ட்ரீட்டாக ஜனவரி 13-இல் வெளியாகும் மாஸ்டர்

பொங்கல் வெளியீடாக மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது

சென்னை:-

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், ஸ்ரீநாத், பிரேம், வர்ஷா பொல்லம்மா, தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் உரிமையை பிரபல OTT நிறுவனமான நெட்பிளிக்ஸ் இணையதளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை என வதந்திகள் பரவ தொடங்கியது.

இப்படியான நிலையில் மாஸ்டர் திரைப்படம் கட்டாயம் திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும். அதன் பின்னரே OTT தளத்தில் வெளியாகும் என படக்குழு விளக்கம் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் அல்ல அமேசான் பிரைம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி.

இந்நிலையில், இந்த படம் பொங்கல் விருந்தாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை படத்தை வெளியிடுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் வேறு ஒரு தேதியில் வெளியிடப்படும் என்று,  கட்டாயம் திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
27-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee