சினிமா

ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்; சீதை யார் தெரியுமா?

ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக உள்ள ஆதிபுருஷ் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் பிரபாஸுக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

ஹைதராபாத்:-

ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பிரபாஸ் ராதே ஷியாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பீரியாட்டிக் காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கிறார். இதனை அடுத்து  ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது அவருக்கு 21-வது படம். 

இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. மேலும் இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர். படத்தின் போஸ்டர் மூலம் ராமாயணத்தின் ஒருபகுதியை படமாக்குவது உறுதியானது. 

சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்க உள்ளார். ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் ராவணனாக நடிக்க உள்ளார்.மேலும் இப்படத்தில் சன்னி சிங் லக்ஷ்மணாக நடிப்பதாக கூறப்படுகிறது.

ராமாயணத்தில் மிக முக்கியமானது சீதாவின் கதாபாத்திரம் தான். ஆதலால் இப்படத்தில் சீதையாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சமீபத்திய தகவலின்படி பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் சீதையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 Bollywood: Kriti Sanon to play Sita in Adipurush that features Prabhas as  Ram and Saif Ali Khan as Lankesh

முதலில் கீர்த்தி சுரேஷ், தீபிகா படுகோனே, அனுஷ்கா ஷெட்டி, அனுஷ்கா சர்மா நடிப்பதாக தகவல் வெளியான நிலையில்  கீர்த்தி சனோன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
27-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee