சினிமா

இந்த காரணத்தால் தான் தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - நடிகை ஐஸ்வர்ய லட்சுமி

இந்த காரணத்தால் ஒரே ஒரு காரணத்திற்காக தான் தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னை:-

கேரளா வரவான நடிகை ஐஸ்வர்ய லட்சுமி, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில்  நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. 

இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார்.

இந்நிலையில், அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், ஜகமே தந்திரம் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே, தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அந்தப்படத்தில் பிராமண பெண் கதாபாத்திரத்திற்கு தான் சரியாக பொருந்தினாலும், தனக்கு அந்த பிராமண பாஷையை சரியாக பேச தெரியவில்லை என்ற காரணத்தால் அந்தப்படத்தில் இருந்து விலக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால் அது எந்தப்படம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
27-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee