உலகம்

கைகால்களை கட்டி 110 விவசாய தொழிலாளர்கள் கொடூரமாக கழுத்தறுத்து கொலை

நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்களை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

அபுஜா:-

வடகிழக்கு நைஜீரிய நகரமான மைடுகுரி அருகே போகோ ஹராம் பயங்கரவாதிகள் 110 பண்ணைத் தொழிலாளர்களை கைகால்களை கட்டி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் சாட், கமரூன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளது.  

இங்கு போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற கொடூர பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவமும், அரசு ஆதரவு பெற்ற குழுக்களும் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அரசு படையினருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

அரசுப்படையினருக்கு ஆதரவாக இருப்பதாவும், ரகசிய தகவல்கள் அனுப்புவதாகவும் கூறி அப்பாவி பொதுமக்கள் மீது போகோ ஹாரம் பயங்கரவாதிகள் அவ்வப்போது கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் மைடுரூகி மாகாணத்தில் கோஷோபி என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று  (சனிக்கிழமை) நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்குவந்த போகோ ஹாரம் பயங்கரவாதிகள் விவசாய வேலை செய்துகொண்டுருந்த தொழிலாளர்களை சிறைபிடித்தனர். மேலும், அவர்களின் 43  பேரின் கைகால்களை கட்டிய பயங்கரவாதிகள் அவர்களை கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்தனர். மேலும், சிலரை கடத்தி சென்றனர். 

நாங்கள் 43 இறந்த உடல்களை மீட்டுள்ளோம், மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் உள்ளனர் ”என்று தப்பிப்பிழைத்தவர்களுக்கு உதவிய போராளித் தலைவர் பாபகுரா கோலோ கூறியுள்ளார்.


இதனிடையே, "இந்த தாக்குதலில் 110 தொழிலாளர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளனர்" என்று எட்வர்ட் கலோன் கூறியுள்ளார். ஆரம்பத்தில் 43 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், போகோ ஹாரம் பயங்கரவாதிகளால் மேலும் 70 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் காயமடைந்தனர் என்றும் கூறியுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து அரசு ஆதரவு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போகோ ஹாரம் பயங்கரவாதிகளின் இந்த கொடூர கொலைகளுக்கு நைஜீரிய அதிபர் முகமது புஹாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அரசு இந்த கொடுமைக்கு உரிய நடவடிக்கை எடுக்கும்  வரை அடக்கம் செய்ய கிராம மக்கள் மறுத்து வருவதாக ஆப்பிரிக்க செய்தி நிறுவனமான ஹம்ஆங்கிள் தெரிவித்துள்ளது.

இராணுவம் மற்றும் அரசாங்க சார்பு போராளிகளுக்காக உளவு பார்த்ததாக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் மீது போகோ ஹாரம் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த தசாப்தங்களில் பயங்கரவாதிகளால் குறைந்தது 30,000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee