இந்தியா

நாளை 2020 ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி சந்திர கிரகணம்; இந்தியாவில் எங்கு எப்போது தெரியும்???

நாளை அற்புதமான இந்த 2020-ம் ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. இந்த கிரகணம் இந்தியாவில் எங்கு, எப்போது தெரியும் என்பதனை காணலாம்.

புதுடெல்லி:-

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரு நேர் கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும் போது இது நிகழ்கிறது. பூமியின் வெளிப்புற நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழும்போது பெனும்பிரல் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்தியாவில் இந்த நிகழ்வு நாளை மதியம் 1:04 மணிக்குத் தொடங்கி மாலை 5:22 மணிக்கு முடிவடையவுள்ளது. மாலை 3:13 மணியளவில் சந்திர கிரகணம் உச்சத்தில் இருக்கும் என்றும் இந்த சந்திர கிரகணம் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் இந்தியாவில் தெரியாது என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்திர கிரகணம் இந்தியாவில் நாட்டின் சில வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்து மட்டுமே தெரியும். அதன்படி பாட்னா, ராஞ்சி, கொல்கத்தா, லக்னோ, வாரணாசி மற்றும் புவனேஷ்வர் ஆகியவை இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் தெரியும்.

ஐரோப்பாவின் பெரும்பகுதி, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்க்டிக் பகுதிகளில் காணப்படும். இருப்பினும், தெரிவுநிலை ஒவ்வொரு இடத்திலும் உள்ள வானிலை நிலையைப் பொறுத்தது.  முன்னதாக கடந்த ஜனவரி 10, ஜூன் 5 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் சந்திர கிரகணங்கள் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியின் நிழல் அதிகபட்ச கிரகணத்தின் போது சந்திரனின் 82% மட்டுமே உள்ளடக்கும் என்பதால் இந்த கிரகணம் முழுமையடையாது. மேலும், அடுத்த சந்திர கிரகணம் 2021 மே 26 புதன்கிழமை அன்று நிகழும்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee