விளையாட்டு

தன் ஆதர்ச நாயகன் மரோடோனவுக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்திய மெஸ்சி

லா லிகா தொடரில் பார்சிலோனா – ஒசசுனா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைசி கோல் அடித்த பின், மெஸ்ஸி, மறைந்த மரடோனாவுக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தினார்.

பிரபல கால்பந்து வீரர் டியாகோ அர்மாண்டோ மரடோனா (60) மாரடைப்பு மற்றும் மூச்சுக் குழாய் அடைப்பு காரணமாக டிசம்பர் 26ஆம் தேதி காலமானார்.  அர்ஜென்டினாவில் அவர் இறந்த நாளிலிருந்து மூன்று நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டது 

இந்நிலையில், லா லிகா தொடரில் பார்சிலோனா – ஒசசுனா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைசி கோல் அடித்த பின், மெஸ்ஸி, மறைந்த மரடோனாவுக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தினார்.

கோல் அடித்தபின், பார்சிலோனா ஜெர்ஸியைக் கழற்றி உள்ளே, கடைசியாக மரடோனா விளையாடிய Newell’s Old Boys கிளப் ஜெர்ஸியை அணிந்திருந்த மெஸ்ஸி, கைகளில் முத்தமிட்டு வானத்தை நோக்கி காண்பித்தார்.

தன் 13 வயதில் பார்சிலோனாவில் சேர்வதற்கு முன், மெஸ்ஸி Newell’s Old Boys கிளப்பில் விளையாடியிருக்கிறார். முன்னதாக, போட்டி தொடங்குவதற்கு முன், மரடோனா மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee