விளையாட்டு

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரிலிருந்து விலகல்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் பீல்டிங்கின் போது காயமடைந்தார். 4-வது ஓவரில் தவான் ‘மிட்-ஆப்’ திசையை நோக்கி விரட்டிய பந்தை வார்னர் ‘டைவ்’ அடித்து தடுத்த போது தொடையும், இடுப்பும் இணையும் பகுதியில் காயம் ஏற்பட்டது

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் பீல்டிங்கின் போது காயமடைந்தார். 4-வது ஓவரில் தவான் ‘மிட்-ஆப்’ திசையை நோக்கி விரட்டிய பந்தை வார்னர் ‘டைவ்’ அடித்து தடுத்த போது தொடையும், இடுப்பும் இணையும் பகுதியில் காயம் ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட வார்னர் கைத்தாங்கலாக மைதானத்திற்கு வெளியே அழைத்து செல்லப்பட்டார். உடனடியாக ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

காயத்தின் தன்மை மற்றும் எதிர்வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளைக் கருத்தில் கொண்டு ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித்தொடரில் இருந்து வார்னர் விலகியுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு முன் தன் உடற்தகுதியை நிரூபிக்கும்பட்சத்தில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee