தமிழ்நாடு

அண்ணா பல்கலைகழகத்துக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

சென்னை:-

கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதி பருவத் தேர்வை தவிர மற்ற பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என  அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். 

இந்த உத்தரவை எதிர்த்தும், ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது என்று கூறியும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மாணவர்களிடம் அதிகளவு தேர்வுக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும், 4 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு நடத்த சுமார் ரூ.37.11 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு தான் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் விடைத்தாள் திருத்தும் பணியை தவிர இதர பணிகளுக்கும் செலவாகி உள்ளது. இதனால் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தை திருப்பி செலுத்தினால் பல்கலைக்கழகத்துக்கு நிதிச்சுமை ஏற்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், தேர்வுக் கட்டணம் வசூலித்த பல்கலைக்கழக பதிவாளரின் உத்தரவு செல்லும் எனக் கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

‘ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் திருப்பித் தர தேவையில்லை. ஏனெனில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டதால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. எனவே கட்டணத்தை செலுத்தாதவர்கள் 4 வாரங்களில் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்’ என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
27-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee