உலகம்

பிரிட்டனின் புதிய சுகாதாரத்துறை மந்திரியாக நாதிம் ஜஹாவி நியமனம்

கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி தயாரிப்பை மேற்பார்வையிட பிரிட்டனின் புதிய சுகாதார அமைச்சராக ஸ்ட்ராட்ஃபோர்டு-ஆன்-அவானின் எம்.பி. நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார்.

லண்டன்:-

கொரோனா தடுப்பூசியைப் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை மேற்பார்வையிடும் பொறுப்பில் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சரான நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு (டவுனிங் தெரு) தேரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே அஸ்ட்ராஜெனெகா என்கிற மருந்து நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. மனிதர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், இந்த தடுப்பூசி சராசரியாக 70 சதவீத தடுப்பாற்றலை கொண்டுள்ளது அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசி கிறிஸ்துமஸ்க்கு முன்பாக ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினரான நாதிம் ஜஹாவியை புதிய சுகாதாரத்துறை மந்திரியாக பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்துள்ளார். இந்த இடைக்கால ஏற்பாட்டின் கீழ் நாதிம் ஜஹாவி தற்போது பணிபுரியும் சுகாதாரத்துறை மற்றும் வணிகத்துறை இடையே கூட்டு மந்திரியாக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது முதன்மை கவனம் தடுப்பூசியை வழங்குவதில் இருக்கும் என்றும் அவருடைய வணிக இலாகாவின் பெரும்பாலான பகுதிகள் ஒதுக்கி வைக்கப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. இவர் அடுத்த ஆண்டு கோடை காலம் வரை கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மேற்பார்வையிடுவார் என தெரிகிறது.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 100 மி அளவுகளுக்கு டோஸேஜ்கள் வழங்க இங்கிலாந்து உத்தரவு வழங்கியுள்ளது இது பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு போதுமானது என்றும் அறிவுறுத்தியுள்ளது. மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் (எம்.எச்.ஆர்.ஏ) ஒப்புதல் அளித்தால், வரும் வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee