தமிழ்நாடு

சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்

கிரானைட் முறைகேடு விசாரணையில் பங்கேற்ற தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:-

மதுரை கிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது சென்னை உயர்நீதிமன்றம் சகாயம் ஐஏஎஸ் தலைமையில் ஒரு குழு அமைத்து விசாணைக்கு உத்தரவிட்டது.

இந்தக்குழு கடந்த 2018-ல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் சுமார் 1,12,681 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  

அதன்பின் சகாயம் விசாரணைக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டார். கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பை தொடர வேண்டும். கிரானைட் முறைகேடு விசாரணையில் பங்கேற்ற தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். 

எனவே கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் விசாரணையில் பங்கேற்ற தற்போதைய அதிகாரிகளுக்கும், பணி ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த நீதிமன்ற விசாரணைக்கு அவர்கள் உதவி தேவைப்படும் என்பதால் அவர்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee