Just In

பிரான்ஸ் கலவரம்; புதிய தேசிய பாதுகாப்பு மசோதா ஏன் சர்ச்சைக்குரியது?

பிரான்ஸ் நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்துள்ளது. ஏன் இந்த மசோதா இவ்வளவு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

பாரிஸ்:-

பிரான்சின் நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருந்த  தேசிய பாதுகாப்பு மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பிரான்சில் மோசமான நோக்கத்துடன் போலீசாரை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கும் வகையில் இந்த புதிய பாதுகாப்பு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

France security bill: Lawmakers pass controversial bill that restricts the  publication of images of police - CNN

இந்த மசோதாவுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் குடிமை மற்றும் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படும் என அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே போல இந்த சட்டம் தொடர்பாக பிரான்ஸ் அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

சரி சட்ட பிரிவு 24 என்ன கூறுகிறது?

புதிய மசோதா தற்போதைய சட்டத்தை திருத்தி, கடமையில் இருக்கும் எந்தவொரு காவல் துறை அதிகாரியின்  முகத்தையும் அடையாளத்தையும் "அவர்களின் உடல் அல்லது உளவியல் ஒருமைப்பாட்டை சேதப்படுத்தும் நோக்கத்துடன்" காண்பிப்பது குற்றம் ஆகும். 

இந்த குற்றத்திற்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 45,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும். 
பிரான்சின் இந்த பாதுகாப்பு சட்ட திருத்தத்தை கடந்த அக்டோபர் மாதம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கட்சி முன்மொழிந்தது,  இதற்க்கு அதன் கூட்டாணி காட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதேபோன்ற மசோதாவை பிரெஞ்சு பாராளுமன்றம் நிராகரித்தது, ஆனால் தேசிய சட்டமன்றத்தில் ஜனாதிபதி மக்ரோனின் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால் இந்த உலகளாவிய பாதுகாப்பு மசோதா கடந்த செவ்வாயன்று பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நிறைவேறியது. 

அதன் எதிர்ப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த மசோதா பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இது பத்திரிகை சுதந்திரத்தை குறைக்கும் வகையிலும், காவல்துறை அராஜகத்துக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,  வன்முறை ஆர்ப்பாட்டங்களின் போது பணியில் இருக்கும் அதிகாரிகளை,  பத்திரிகையாளர்கள் மற்றும் பிறர் படமாக்கும் போது அவர்களுக்கு இதனால் ஆபத்து விளையும் என்று  சட்டத்தை எதிர்ப்பவர்கள் கவலைப்படுகிறார்கள்.

காவல்துறையின் மிருகத்தனத்தின் எதிர்கால சம்பவங்களைத் தடுக்க வன்முறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை ஆவணப்படுத்துவதும் பகிர்ந்து கொள்வதும் அவசியம்.

"தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன்" படங்கள் ஆன்லைனில் பகிரப்படுகிறதா இல்லையா என்பதை நீதிமன்றங்கள் தான் தீர்மானிக்கும் என்று கூறுகின்றனர்.

மேலும், பாரிஸில் இந்த வாரம் நடந்த வன்முறை சம்பவம் போலவே, ஜூலை மாதம் மூன்று பிரெஞ்சு அதிகாரிகள் மீது ஓட்டுநர் ஒருவரை படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இவை அந்த சம்பவத்தை படப்பிடித்தவர்களால் தெரியவந்தது என்றனர்.

இந்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள்?

பத்திரிகையாளர்கள், அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பினர், மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பத்திரிகையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும் இந்த சட்டத்தை எதிர்த்து மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்துகின்றன.

இந்த சட்டத்தை எதிர்த்து தலைநகரில் சனிக்கிழமையன்று மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர், இந்த வார இறுதியில் ஆர்ப்பாட்டங்கள் நாண்டெஸ் மற்றும் லியோன் உள்ளிட்ட பிற முக்கிய பிரெஞ்சு நகரங்களுக்கும்  பரவியுள்ளது.

பத்திரிகையாளர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் அரசாங்க எதிர்ப்பாளர்களான கிலெட்ஸ் ஜானஸ் எனப்படும் மஞ்சள் சட்டை இயக்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா சபை எதிர்ப்பு:-

ஐரோப்பிய ஒன்றியம் திங்களன்று பிரான்சுக்கு பத்திரிகையாளர்கள் "சுதந்திரமாகவும் முழு பாதுகாப்பிலும்" பணியாற்ற வேண்டும் என்பதை பிரெஞ்சு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய இந்த தேசிய பாதுகாப்பு மசோதாவை ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களுடன் ஒத்துள்ளதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் மற்றும் பிரான்சின் சொந்த மனித உரிமைகள் அதிகாரி  ஆகியோரும் புதிய சட்டம் ஊடகம் மற்றும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை குறைப்பதற்கான  செயல் என்று கண்டித்துள்ளனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee