தமிழ்நாடு

புரெவி புயல் இலங்கை அருகே கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:-

வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் டிசம்பர் 2ம் தேதி மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து 1,040 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் புரெவி என்ற பெயரை பெரும்.

“வங்கக் கடலில் உருவாகும் “புரெவி“ புயல், இலங்கையில் கரையைக் கடந்து, பின் குமரிக் கடலை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும்.  சென்னையைப் பொறுத்தவரையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேலும், டிசம்பர் 1ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும், டிசம்பர் 2ம் தேதி தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும், டிசம்பர் 3-ம் தேதி தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  டிசம்பர் 3-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee