உலகம்

வேட்டைக்காரர்களுக்கு முன்னாலேயே வாத்தை வேட்டையாடிய 13 அடி நீள ராட்சத முதலை - வைரல் வீடியோ

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் 13 அடி நீளமுடைய ராட்சத முதலை ஒன்று வேட்டைக்காரர்களுக்கு முன்னாலேயே வாத்தை வேட்டையாடும் காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஃபுளோரிடா:-

புளோரிடாவின் உள்ள ஒரு ஏரியின் நடுவில் பிரம்மாண்டமான ஊர்வன காணப்படுவதைக் காணலாம், அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை சந்தேகத்திற்கு இடமில்லாத சில வாத்துகளில் விருந்து வைத்தது.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள உள்ள சதுப்பு நில பகுதிகளில் ஆயிரக்கணக்கான முதலைகள் வாழ்கின்றன. குறிப்பாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள சதுப்புநில பகுதிகளில் ஏராளமான முதலைகள் வாழ்கின்றன. இந்த முதலைகள் சிலவை மிகவும் நீளமானதாகவும், அபரிவிதமான வளர்ச்சியுடன் ஆபத்தானதாக காணப்படுகிறது.

இந்நிலையில், மத்திய ஃபுளேரிடா மாகாணத்தின் லீஸ்பர்க்கில் பகுதியில் உள்ள சதுப்புநிலத்தை பார்ப்பதற்காக கேவின் ஸ்டிபி மற்றும் கேஸ் கவு ஆகிய இரு வேட்டைக்காரர்கள் சென்றிருந்தனர்.

சதுப்புநில பகுதியை சுற்றிப்பார்த்துக்கொண்டுந்தபோது அப்போது பிரம்மாண்டமான ராட்சத முதலை ஒன்று தண்ணீரின் மேற்பரப்பில் இருந்த வாத்தை வேட்டையாடியதை கண்டனர். இதையடுத்து, அவர்கள் உடனடியாக தங்கள் செல்போனில் முதலை வாத்தை வேட்டையாடுவதை வீடியோ எடுத்தனர்.
நீரில் இருந்த வாத்தை இலாவகமாக வேட்டையாடிய அந்த முதலை ராட்சத அளவில் 13 அடி நீளம் கொண்டதாக இருந்தது. அவ்வளவு நீளம் கொண்ட அந்த முதலையை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

                                                 Courtesy


பின்னர் தாங்கள் எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதையடுத்து, 13 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட முதலை வாத்தை வேட்டையாடிய அந்த வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

வலைதளவாசிகள் பலரும் ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் காட்சி போல் இந்த முதலை வாத்தை கவ்வியதாக  பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee