தமிழ்நாடு

7.5 % உள் ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு- தமிழக அரசு

7.5 % சிறப்பு உள் ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்காக தமிழக அரசு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு.

சென்னை:- 

7.5 % ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி, விடுதி கட்டணத்திற்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தனியார் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் அவர்களுக்கான கல்விக்கட்டணத்தை எவ்வாறு செலுத்த முடியும் என கேள்வி எழுந்தது. அதனைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தனியார் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என கூறினார்.

அதனைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று கூறினார். 

தற்போது சுயநிதி மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட 184 மாணவர்களின் கல்விக்கு ரூ.15.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் 215 மாணவர்களின் கல்விக்கு 3.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவ சேவை கழகத்தின் மூலம் உருவாக்கிய சுழல் நிதி மூலம்  இக்கல்விக்கட்டணத்தை அரசு செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee