இதுபற்றி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், சீக்கிய மதத்தினை தோற்றுவித்த குருநானக் தேவ்ஜியின் பிறந்த நாளை கடைப்பிடிக்கும் அமெரிக்கா மற்றும் உலகமெங்கும் உள்ள நம்முடைய சீக்கிய நண்பர்களுக்கு நாங்கள் இனிய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
சீக்கியர்களின் போராட்டத்தில் அனைத்து வயதுடையோரும் அமைதியான முறையில் பேரணியாக செல்லும் நிகழ்வை நாங்கள் பார்க்கிறோம்.
இந்த நாளில், குருநானக்கின் காலத்திற்கும் மாறாத மற்றும் உலகளாவிய செய்தியான இரக்கம் மற்றும் ஒற்றுமையை நாம் அனைவரும் நினைவுகூர்வோம். அவை நமக்கு ஊக்கம் அளிப்பதுடன், மக்களுக்கு ஏற்பட்டுள்ள போராட்ட வலி குறைய உதவுவதுடன், நாட்டில் போராட்டம் முடிவுக்கு வருவதற்கும் உதவும் என தெரிவித்து உள்ளனர்.