மாஸ்கோ:-
ரஷ்யா நாட்டின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 4.24 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.