தென்காசி மாவட்டம் திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன காளான் பட்டியில் சார்பு ஆய்வாளர் திருமதி.கமலாதேவி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (38) மற்றும் சேர்மக்கனி (38) ஆகியோர் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருவதை அறிந்து காவல்துறையினர் நிறுத்தி விசாரணை செய்யும் போது அவர்களை அசிங்கமான வார்த்தைகளால் பேசி அரசு பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.
மேலும் அவர்களை கைது செய்ய முயற்சி செய்யும் போது அவர்கள் இருவரும் சேர்ந்து காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.. இதுகுறித்து மேற்படி சுப்புராஜ் மற்றும் சேர்மக்கனி ஆகியோர் மீது சார்பு ஆய்வாளர் திருமதி.கமலாதேவி அவர்கள் திருவேங்கடம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தார்.