நாளுக்கு நாள் ஏற்படும் வளர்ச்சிகள் எண்ணிலடங்காதவை. அனைத்ததும் விறல் சொடுக்கிடும் நேரத்தில் நமக்கு கிடைத்துவிடுகிறது. இருப்பினும் என்ன தான் நாளுக்கு நாள் அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தாலும் சில விஷயங்கள் இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் தான் கொரோனா, எய்ட்ஸ் போன்ற நோய்கள். இதுப்போன்ற நோய்களை குணப்படுத்த இன்னும் முழுவதுமாக மருந்து கண்டுபிடுக்கப்படவில்லை.
முதன்முதலாக எய்ட்ஸ் என்பது ஒருவகையான புற்றோநோய் என்று தான் பார்க்கப்பட்டு வந்தது. இந்த நோய் ஏற்படுவதற்கு பலவிதமான காரணிகள் சொல்லப்பட்டு வந்தன. பின்னர் 1984ஆம் ஆண்டு ஆரோக்கியமற்ற முறையில் உடலுறவு கொள்வதால் இந்த நோய் ஏற்படுவதாகவும் அதன் பெயர் எய்ட்ஸ் என்றும் அறியப்பட்டது. பின்னர் 1985 ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசியாவில் முதன் முதலாக எய்ட்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார்.
2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அளவில் 4 கோடி பேர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 01 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம். இந்த நாளின் நோக்கம், எய்ட்ஸ் பரவாமல் தடுத்தல், அதன் பாதிப்புகளை குறைத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுதல் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்பவை.
2000 -வது ஆண்டிற்கு பின்னர் இந்த நோயின் தாக்கம் 35 சதவீதம் குறைந்துள்ளதாகவும் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோயின் தாக்கம் 58 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் என்பது தொற்று வியாதி அல்ல. எச்.ஐ.வி (HIV) தொற்று உள்ளவர்களையும் சமமாக பாவிப்போம் அவர்களின் வாழ்வையும் மேம்படுத்துவோம். எச்.ஐ.வி (HIV) தொற்று இல்லா உலகம் படைப்போம்.