Just In

இணையத்தில் வைரலாகும் விராட் கோலி மனைவியின் கர்ப்பக்கால உடற்பயிற்சி புகைப்படம்..!!

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றி வரும் அனுஷ்க்கா ஷர்மா, தற்போது பதிவேற்றியிருக்கும் புகைப்படம் லட்சக்கணக்கில் ஹார்டின்களை அள்ளி வருகிறது.

அனுஷ்கா ஷர்மா தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் நறுக்கென சொல்லும் அளவுக்கு இருக்கும். அதை கச்சிதமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுவார். நடிப்பு மட்டுமல்லாது பொதுவெளியிலும் தன்னுடைய பங்களிப்பை அவ்வபோது தரக்கூடியவர். முக்கியமான விஷயங்கள், கட்டாயம் இதற்குக் குரல் கொடுத்தே ஆக வேண்டும் போன்ற பிரச்னைகளிலெல்லாம் அனுஷ்காவின் வாதங்களும் , குரலும் நிச்சயம் இருக்கும்.

விராட் கோலி மனைவி அனுஷ்காவைக் கண்டு பெண்கள் அனைவரும் வியக்கும் விஷயங்களில் ஆடை ஸ்டைலும் ஒன்று. அவருடைய அவுட்ஃபிட் எப்போதும் டிரெண்டியாகவே இருக்கும். எந்த உடை அணிந்தாலும் அதற்கு ஏற்ற வகையில் தன்னை முன்னிருத்துவார். இவர் விராட் கோலியின் மனைவி என்கிற அடையாளத்தில் வாழாமல் தனக்கான அடையாளத்துடனே திருமணத்திற்கு முன்பும் , பின்பும் வாழ்ந்து வருகிறார். அந்தவகையில் அனுஷ்காவைக் கண்டு பெண்கள் வியக்கும் விஷயங்களில் ஆடை ஸ்டைலும் ஒன்று. அவருடைய அவுட்ஃபிட் எப்போதும் டிரெண்டியாகவே இருக்கும். எந்த உடை அணிந்தாலும் அதற்கு ஏற்ற வகையில் தன்னை முன்னிருத்துவார்.

தற்போது கர்பமாக இருக்கும் அவருக்கு வரும் ஜனவரியில் குழந்தை பிறக்கப் போகிறது என இன்ஸ்டாவில் பகிர்ந்துகொண்டார். தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் அதற்கு ஏற்ப மெடர்னிடி அவுட்ஃபிட் என்று சொல்லக் கூடிய கர்ப்பகால ஆடைகளை கச்சிதமாக அணிந்து அசத்துகிறார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றி வரும் அனுஷ்க்கா ஷர்மா, தற்போது பதிவேற்றியிருக்கும் புகைப்படம் லட்சக்கணக்கில் ஹார்டின்களை அள்ளி வருகிறது.

கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா ஷர்மா தனது கணவர் விராட் கோலியின் உதவியுடன் தலைகீழாக நின்றுக் கொண்டு உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றினை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். எப்பொழுதும் தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் அனுஷ்கா கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் காலம் தவறாது காலை மாலை என இரண்டு வேளைகளும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். கர்ப்பக் காலத்தில் பெண்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதின் அவசியத்தை அனுஷ்கா முன்னிறுத்தி இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என்று அவரது ரசிகைகள் கமெண்டில் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee