எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு மார்ச் 20, 21-ல் நடைபெறும் என அறிவிப்பு.
எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு மார்ச் 20, 21-ல் நடைபெறும் என அறிவிப்பு.
சென்னை:-
தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ளஎம்இ, எம்டெக் போன்ற முதுநிலை படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வில் (டான்செட் ) தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வை அண்ணா பல்கலை. நடத்துகிறது. அதன்படி எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு மார்ச் 20, 21-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.19 முதல் பிப். 12 வரை டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.