அரசியல்

பொய் சொல்வதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்- முதல்வர் பழனிசாமி கிண்டல்

பொய்க்காக நோபல் பரிசு கொடுத்தால் அது ஸ்டாலினுக்கு பொருத்தமாகும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

ஈரோடு:-

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி:-

தி.மு.க. ஆட்சியிலும் அ.தி.மு.க. ஆட்சியிலும் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் (மக்கள்) சிந்தித்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க.வில் ஒருவர் தவறு செய்தால் அவர் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தி.மு.க.வில் அதுபோன்ற நிலை இல்லை. இன்று தமிழகம் சட்ட ஒழுங்கில் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.

தமிழகம் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு தேசிய விருதுகள் பெற்றுள்ளது. உள்ளாட்சி துறையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் பெற்றுள்ளது. மேலும் உறுப்பு மாற்று சிகிச்சை, நீர்மேலாண்மை, மின்மிகை மாநிலம், கல்வி என பல துறைகளிலும் தேசிய விருது பெற்று தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. ஆனால், தி.மு.க. ஆட்சியில் சரியான நிர்வாக திறமை இல்லாததால் 1 விருது கூட பெற முடியவில்லை.

ஆனால், மக்களை பற்றி சிந்திக்காமல் அவர் கூறுவது அனைத்தும் பொய். பொய்க்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது பொருத்தமாகும்.

இரவு, பகல் பாராமல் இந்த அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது. எனவே வருகிற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு முதல்வர் பேசினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee