அரசியல்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; முன்னாள் திமுக எம்.எல்.ஏ விடுதலைக்கு எதிராக தமிழக அரசு மனு

15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ விடுதலைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு.

புதுடெல்லி:-
15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக  எம்.எல்.ஏ ராஜ்குமார் விடுதலைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் வீட்டில் வேலை பார்த்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 2012ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Breaking: பெரம்பலூர் சிறுமி பாலியல் பலாத்காரம், கொலை விவகாரத்தில், முன்னாள்  திமுக எம்.எல்.ஏ விடுதலை.!! - Seithipunal
இந்த வழக்கில் ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.42 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாரும், அவரது நண்பரும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதாகக் கூறி அவர்களை விடுதலை செய்து கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கி இருந்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் ஆஜரான யோகேஷ் கண்ணா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் வழக்கில் ஆதாரம் சரியான முறையில் இருந்ததால் தான் சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. 
ஆனால் அதனை உயர்நீதிமன்றம் ரத்து செய்து குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்கியுள்ளது. அதனால் இந்த வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee