விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணி 197 ரன்கள் முன்னிலை

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் புகோல்ஸ்கி 62 ரன், லபுஸ்சேன் 91 ரன், ஸ்மித் 131 ரன் எடுத்தனர். 

அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 5 ரன்களிலும் புஜாரா 9 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரகானே 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹனுமா விஹாரி 4 ரன்னில் ரன் அவுட்டானார். பொறுமையாக ஆடிய புஜாரா, சுப்மன் கில் இருவரும் 50 ரன்கள் எடுத்தனர். ரிஷப் பன்ட் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா அணி 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 28 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார். ஹாசில்வுட் 2 விக்கெட், ஸ்டார்க் ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து 94 ரன்கள் முன்னிலையுடன் அணி 2ம் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புடன் 197 ரன்கள் முன்னிலையில் உள்ளது 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee