Trending News

காளிதாஸ் ஜெயராமை நேரில் அழைத்து பாராட்டிய மாஸ்டர் விஜய்.!!

நடிகர் ஜெயராமின் மகனும், வளர்ந்து வரும் இளம் நடிகருமான காளிதாஸை நடிகர் விஜய் நேரில் பாராட்டி உள்ளார்.

இயக்குநர்கள் வெற்றி மாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கதைக்கருவை மையமாக வைத்து "பாவக்கதைகள்" என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கினார்கள். 

ஓடிடி தளத்தில் வெளியாகிய இந்தப் படம், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. சாதிப் பெருமை, குடும்ப கௌரவம் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் மற்றும் இழப்புகள் குறித்து பேசும்படியாக இதன் ஒவ்வொரு கதையும் அமைந்திருந்தது. 

அதிலும் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சாந்தனு, காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'தங்கம்' பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர் பற்றிய இந்தக் கதை, பார்வையாளர் மனதை உருக்கியது. குறிப்பாக மூன்றாம் பாலினத்தவராக நடித்த நடிகர் காளிதாஸ் ஜெயராம் ரசிகர்களிடம் சிறப்பான பாராட்டுகளைப் பெற்றார். 

இந்நிலையில் தற்போது காளிதாஸை நடிகர் விஜய் பாராட்டி இருக்கிறார். சமீபத்தில் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள காளிதாஸ், "இதைவிட எந்த விஷயமும் சிறப்பாக இருக்க முடியாது என்று நினைத்தபோது... மாணவனை சந்தித்த மாஸ்டர். விஜய் சார் உங்கள் நேரத்தை எனக்காக ஒதுக்கியதற்கு நன்றி" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee