ஆன்மிகம்

வினை தீர்க்கும் விநாயகர் விரதங்கள்

விநாயகரின் அருள் பெற்று அனைத்து நலன்களையும் சுகங்களையும் பெற, வாழ்க்கையில் துன்பம், இடைஞ்சல்கள் வராது இருக்க கடைபிடிக்க வேண்டிய விரதங்கள்.

விக்னங்களையெல்லாம் நீக்கி வாழ்வில் வளத்தினை வழங்கும் வரப்பிரசாதி தான் விக்னேஸ்வரன். வினை தீர்க்கும் விநாயகரை எப்படி வேண்டுமானாலும் வணங்கலாம், கொண்டாடலாம். அந்தக் கொண்டாட்டகளில் ஒன்றுதான் விரதம் இருத்தல். அப்படி விநாயகருக்கென்று அனுசரிக்கும் விர தங்கள் சில இங்கே,

வினை தீர்க்கும் நாயகனே ! விநாயகரிடமிருந்து கற்றுக்கொள்ள 8 முக்கியமான  வாழ்க்கைப் பாடங்கள்

சதுர்த்தி விரதம்:-

ஆவணி வளர்பிறை சதுர்த்தி அன்று தொடங்கி அடுத்த ஆண்டு புரட்டாசி சதுர்த்தி வரை ஒரு ஆண்டிற்கு தொடர்ந்து அனுஷ்டிப்பது சதுர்த்தி விரதம். இதனால் செய்யும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

சங்கடஹர சதுர்த்தி விரதம்:-

மாசி மாத தேய்பிறை சதுர்த்தி அன்று தொடங்கி, ஒரு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாத தேய்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருப்பது. இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தினால் எப்படிப்பட்ட துன்பமும் விலகிவிடும்.

விநாயகர் நவராத்திரி விரதம்:-

விநாயகர் சதுர்த்தியன்று தொடங்கி தொடர்ந்து 9 நாட்கள் இரவு 8 மணிக்கு திருவிளக்கு ஏற்றி, விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து வணங்குவது விநாயகர் நவராத்திரி விரதம். இந்த விரதத்தால் கன்னிப் பெண்களுக்கு சிறந்த மணவாழ்க்கை அமையும்; அருமையான வாரிசுகள் உருவாகும்.

குமார சஷ்டி விரதம்:

முருகன் சம்பந்தப்பட்ட பெயர்போல இருந்தாலும் இந்த விரதமும் விநாயகருக்காக அனுஷ்டிக்கப்படுவதுதான். கார்த்திகை தேய்பிறை பிரதமை திதி முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் அனுசரிக்கும் இந்த விரதத்தால் ‘தைரியம்’ அதிகரிக்கும். இந்த விரதத்தை ‘பிள்ளையார் நோன்பு’ என்பர்.

செவ்வாய் விரதம்:-

தை அல்லது ஆடி மாதம் முதல் செவ்வாய் தொடங்கி, தொடர்ந்து 52 வாரங்களுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அனுஷ்டிக்கும் இந்த விரதம் ‘செவ்வாய் விரதம்’ எனப்படுகிறது. இந்த விரதத்தால் செல்வ வளம் பெருகும். இந்த விரதம் மேற்கொள்ளும் பெண்கள், உடலின் இயற்கை உபாதை காரணமாக மேற்கொள்ள முடியாத வாரங்களைக் கணக்கிட்டு, பின்னால் அதைச் சேர் த்து, மொத்தத்தில் 52 வாரங்கள் அனுசரிப்பது வழக்கம்.  

வெள்ளிக்கிழமை விரதம்:-

வைகாசி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கி, தொடர்ந்து 52 வெள்ளிக்கிழமைகளில் அனுஷ்டிக்கும் விரதம். இந்த விரதத்தால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

தை வெள்ளி விரதம்:-

விநாயகரைக் குறித்து தை மாத வெள்ளிக்கிழமைகளில் அனுஷ்டிக்கும் விரதம். இதனைப் பெண்கள் மட்டுமே அனுசரிப்பதுதான் வழக்கம். இதனால் செல்வ விருத்தியும், கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee