அரசியல்

அரசியலுக்கு வர வலியுறுத்தாதீர்கள்- ரஜினிகாந்த் வேதனை

தலைமையின் உத்தரவையும் மீறி அரசியலுக்கு வர வலியுறுத்தி போராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை:-

இந்த ஆண்டு நடைபெறயுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து, புதிய கட்சி ஒன்றைத் துவங்கி அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், பின்னர் தனது உடல்நிலையை காரணம் காட்டி அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். மேலும், தன்னுடைய  உடல்நிலை காரணமாக இனி தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிக்கை ஒன்றின் மூலமாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்நிலையில், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி வந்த அவரது ரசிகர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழம) வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை அவரது ரசிகர்கள் நடத்தினர். இதில் பெரும் திரளான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த், தன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

மேலும், தயவுகூர்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தன்னுடைய அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee