அமெரிக்க வன்முறை காரணமாக அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் ஒரு இந்திய பெண் என தகவல் தெரியவந்துள்ளது.
அமெரிக்க வன்முறை காரணமாக அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் ஒரு இந்திய பெண் என தகவல் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:-
அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகை மற்றும் சர்ச்சை கருத்துகளை வெளியிட்டது உள்ளிட்ட காரணங்களை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை அந்நிறுவனம் முழுமையாக முடக்கியது. இந்நிலையில் ஜனாதிபதி டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் இந்திய பெண்ணான விஜயா கடே (45) என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பிறந்த விஜயா கடே தனது 3-வது வயதில் பெற்றோருடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு குடிபெயர்ந்து உள்ளார். அங்கு அவரது தந்தை மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ரசாயன பொறியாளராக பணிபுரிந்தார்.
அமெரிக்காவின் கார்னெல் பல்கலைகழகத்தில் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை பட்டமும் நியூயார்க் பல்கலைகழகத்தில் சட்ட படிப்பும் முடித்து பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.