கல்வி & வேலைவாய்ப்ப

சைனிக் பள்ளிகளில் சேர நுழைவுத்தேர்வு: ஹால் டிக்கெட்டை வெளியீடு

சைனிக் பள்ளிகளில் சேர நுழைவுத்தேர்வுக்கான நுழைவு சீட்டை என்டிஏ வெளியிட்டது.

புதுடெல்லி:-

சைனிக் பள்ளிகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான நுழைவு சீட்டை , தேர்வை நடத்தும் தேசிய பாதுகாப்பு அகாடமி வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் 2021- 22ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வு வரும் ஜன.10-ம் தேதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

அதற்கான விண்ணப்பப் பதிவு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் நிர்வாகக் காரணங்களால் நுழைவுத்தேர்வு பிப். 7-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்வு எழுத உள்ள 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை, தேர்வை நடத்தும் என்டிஏ வெளியிட்டுள்ளது. இதில் தேர்வரின் பெயர், அடையாள எண், தேர்வு மையம், தேதி மற்றும் இடம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நுழைவு சீட்டைத் தரவிறக்கம் செய்வதற்கான லிங்க்: aissee.nta.nic.in

இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 0120 6895200 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது aissee@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாகவோ விளக்கம் பெறலாம்.

வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து சைனிக் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பில் சேருவதற்கு மாணவிகளும் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல வரும் கல்வி ஆண்டு (2021-22) முதல் கிரீமிலேயர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee