உலகம்

மோடி ஆட்சியில் இந்தியா வலிமையான நாடாக மாறிவிட்டது- இம்ரான் கான்

கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோடி ஆட்சியில் இந்தியா வலிமை மிக்க நாடாக மாறியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்:-

கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா வலிமை மிக்க நாடாக மாறியுள்ளதால் இராணுவத்தை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் 73வது சுதந்திர தின நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் இம்ரான் கான் , ‛ இந்தியா பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகுந்த வலிமை மிக்க நாடாக மாறியுள்ளது. அதனால் பாக்., ராணுவம் அதற்கு இணையாக வலிமையை கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது. இம்ரான் கானின் இந்த உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தற்போதைய மோடியின் ஆட்சியில் இந்திய அரசு வலிமை அடைந்திருப்பதால் நாம் ராணுவம் பலத்தை கூட்ட வேண்டும் என்று இம்ரான் தன்னுடைய அச்சத்தை அந்த வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டில் உரி பகுதியில் பாக். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்கு சில நாட்களிலேயே இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. 2019ம் ஆண்டு பிப்.,14 ல் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தில் மீது நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் நம் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். ஆனால் 12 நாட்களிலேயே இந்திய விமானப் படை பாலகாட் பகுதியில் நடத்திய தாக்குதலில் 300க்கும் அதிகமான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இச்சம்பவத்தை முதலில் மறுத்து வந்த பாகிஸ்தான் அரசு தற்போது ஒத்துக் கொண்டுள்ளது.
அடுத்த சில மாதங்களிலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. 

பாகிஸ்தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கிய விவகாரத்தில் இந்தியா உறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee