கர்நாடகா அங்கோலா பகுதியில் கார் விபத்துக்குள்ளாகி மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் காயம், மனைவி, உதவியாளர் உயிரிழப்பு.
கர்நாடகா அங்கோலா பகுதியில் கார் விபத்துக்குள்ளாகி மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் காயம், மனைவி, உதவியாளர் உயிரிழப்பு.
பெங்களூரு:-
கர்நாடகா அங்கோலா தாலுகாவில் உள்ள ஹோசாகும்பி பகுதியில் அமைச்சரின் கார் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் காயம் அடைந்தார்.
விபத்தில் சிக்கிய அமைச்சரின் மனைவி, அவரது உதவியாளர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இருவரையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமைச்சர் நாயக் தனது மனைவி, ஓட்டுநர் மற்றும் பிறருடன் கோவாவிலிருந்து யெல்லாப்பூர் நோக்கி பயணித்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.