இந்தியா

இந்தியாவில் 1.1 கோடி பேர் கொரோனா தொற்றில் இருந்துமீண்டனர்..!!!

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரு கோடியே ஒரு லட்சம் பேர் மீண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரு கோடியே ஒரு லட்சம் பேர் மீண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில் இங்கிலாந்தில் இருந்து பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 


அந்த வகையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 584 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே நான்கு லட்சத்து 79 ஆயிரத்து 179 ஆக அதிகரித்துள்ளதுஇதுவரை வைரஸ் தொற்றால் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 327 பேர் உயிரிழந்த சூழலில், தற்போது வரை இரண்டு லட்சத்து 16 ஆயிரத்து 558 பேர் நோய் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


நேற்று மட்டும் 18 ஆயிரத்து 385  பேர் நலம் பெற்று வீடு திரும்பிய சூழலில், தற்போது வரை ஒரு கோடியே ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 294 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே நேற்று மட்டும் நாடு முழுவதும் 8 லட்சத்து 97 ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை 18 கோடியே 26 லட்சத்து 52 ஆயிரத்து 887 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee