மாஸ்டர்’ படத்தை இணைதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட நபரை டுவிட்டர் நிறுவனம் உதவியுடன் படக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மாஸ்டர் திரைப்படம் நாளை திரையில் வெளியாக இருக்கும் நிலையில், நேற்று சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானதாக பரபரப்பாக பேசப்பட்டது.
இதனையடுத்து படத்தின் காப்பியை யார் யாரிடம் கொடுத்தோம் என்ற ரீதியில் படக்குழுவினர் விசாரணையை தொடங்கினர்.
அதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் திரைப்படத்தின் காப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவர் கள்ளத்தனமாக படத்தை இணைதளத்தில் லீக்
செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். குற்றம் செய்தவரை கண்டுபிடிக்க டுவிட்டர் நிறுவனம் படக்குழுவுக்கு உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது..