தொழில்நுட்பம்

ராயல் என்பீல்டு புல்லட் 350 விலையில் திடீர் மாற்றம்..!!

இந்திய சந்தையில் தில இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் மோட்டார்சைக்கிள் மாடல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வரிசையில், ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது

விலை உயர்வின்படி ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடல் துவக்க விலை ரூ. 1,27,284 முதல் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,42,895 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் 346சிசி, சிங்கிள் சிலிண்டர், பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புல்லட் 350 மோட்டார்சைக்கிளில் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் ட்வின்-சைடெட் ஸ்ப்ரிங், முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee