சினிமா

 பிரபல பாலிவுட் நடிகர் வலிமை படத்தில் பைக் ரேஸராக நடிக்கிறாரா..???

வலிமை படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் முக்கியமான பைக் ரேஸ் காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு செல்வதை தவிர்த்து, இந்தியாவிலேயே அந்தக் காட்சிகளை படமாக்க உள்ளார்களாம்.

இந்நிலையில், வலிமை படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் பைக் ரேஸராக அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடைபெற உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee