இந்தியா

புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

மறு அறிவிப்பு வரும் வரை, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:-

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் சுமார் 50 நாள்களாக போராடி வருகின்றனர். அரசுடன் விவசாயிகள் நடத்திய  பேச்சு வார்ததையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனிடையே, டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரியும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை என கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

அந்த வழக்குகளை மொத்தமாக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் மறு அறிவிப்பு வரும் வரை, அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க குழு அமைத்தும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்தக் குழுவில் அசோக் குலாட்டி, ஹர்சிம்ராட் மன், அனில் கன்வாட், பிரமோத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளையில், நாடாளுமன்றத்தில் 2 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இடைக்கால நிவாரணம்தானே தவிர முடிவு அல்ல என்று விவசாயிகள் தரப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee