அரசிற்கு 200 ரூபாய்க்கும் தனியாருக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக சீரம் நிறுவனம் தகவல்
அரசிற்கு 200 ரூபாய்க்கும் தனியாருக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக சீரம் நிறுவனம் தகவல்
டெல்லி:-
முதல் 100 மில்லியன் டோஸ்களுக்கு கோவிஷீல்டு விலை ரூ.200 ஆக இருக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனவல்லா கூறியுள்ளார்.
ஜனவரி 16ம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில், கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதலவர் மற்றும் ஆளுநர்களுக்கிடையேயான ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
முதல்கட்டமாக சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தடுப்பு மருந்து ஒரு டோஸ் 200 ரூபாய் ஜி.எஸ்.டி., வரியாக 10 ரூபாயை சேர்த்து, 210 ரூபாய்க்கு, வாங்க உள்ளது.
இது முன்கள பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு உதவும் விதமாக இருக்கும். அதன் பிறகு பிறகு தனியாருக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு விலை ரூ.1000-க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.