தமிழ்நாடு

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக உறைகிணறுகள் பாதிப்பு!!!

தாமிரபரணியில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக உறைகிணறுகள் பாதிப்பு.

நெல்லை:-

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் நிலையில் தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியிருக்கும் நிலையில், இவற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தண்ணீர் முழுவதும் தாமிரபரணியில் உபரியாக திறந்துவிடப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரள்கிறது. மணிமுத்தாறு அணைப்பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் சில உறைகிணறுகள் பதிப்படைந்துள்ளன. உறைகிணறுகள் பாதிப்பால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படவில்லை என நெல்லை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும், நெல்லை மாவட்டத்தில் கனமழையால் 3 வீடுகள் சேதமடைந்த்ள்ளதாக ஆட்சியர் விஸ்ணு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடரும் கனமழையால் தாமிரபரணியில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee