அமெரிக்காவின் சான் டியாகோ பூங்காவில் உள்ள கொரில்லாகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சான் டியாகோ பூங்காவில் உள்ள கொரில்லாகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
சான்டியாகோ:-
அமெரிக்காவில் சான்டியாகோ உயிரியல் பூங்காவில் கொரில்லா குரங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சான்டிகோ உயிரியல் பூங்காவில் 8 கொரில்லா குரங்கள் ஒன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவைகளில் சில குரங்களுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வனவிலங்குகளை பராமரிக்க வந்த குழுவில் ஒருநபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
ஆனாலும், அந்த நபர் முழு நேரமும் மாஸ்க் அணிந்தபடி இருந்துள்ளார். அவரிடமிருந்து கொரில்லாக்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. கொரில்லாக்களுக்கு இருமல் தவிர வேறெந்த பெரிய பாதிப்பும் இல்லை.
பூங்காவில் நிர்வாக இயக்குனர் லிசா பீட்டர்சன் கூறுகையில்,
இதுவரை சஃபாரி பூங்காவில் உள்ள 8 கொரில்லா குரங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பல கொரில்லா குரங்களுக்கு கடும் இருமல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பூங்காவில் உள்ள கொரில்லாக்களைப் பாதுகாப்பதற்கான தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.